- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதலாம் அமைச்சர் எல்ஏ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு. கே. ஏ
- ஸ்டாலின்
- ஐரோப்பிய ஒன்றிய
சென்னை: மத சிறுபான்மை தொண்டு நிறுவனங்களை குறிவைத்து பாஜ நேரடி தாக்குதல் தொடுக்கவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவ தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மத சிறுபான்மை தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் ஆகும்.
ஏற்கனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மத சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ. அரசு இறங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்கு பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன். இந்த முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் மோடி இந்த தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
