×

போற இடமெல்லாம் காவு வாங்குறாரு… விவசாயம் பார்த்து இறந்தவங்கள விட விஜய்ய பார்த்து செத்தவங்க அதிகம்: நடிகை விந்தியா ஆதங்கம்

சென்னை ஆலப்பாக்கம் ரோடு மற்றும் காரம்பாக்கத்தில் நடிகை விந்தியா பிரசாரம் செய்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: கட்சி ஆரம்பித்து சிஎம் ஆகிவிடலாம் என சிலர் வருகின்றனர். விஜய்யின் அரசியல் கூட்டம் எல்லாம் அனுதாப கூட்டமாக மாறி வருகிறது. விஜய் போகும் இடமெல்லாம் கூட்டத்தில் காவு வாங்குகிறார். ஊர், ஊராக சென்று கூட்டம் போட்டு ரசிகர்களை சாகடிக்க எதற்காக கட்சி ஆரம்பிக்க வேண்டும். விவசாயம் பார்த்து இறந்தவர்கள் கூட குறைவு. ஆனால் விஜய்யை பார்த்து இறந்தவர்கள் அதிகம். விவசாயம் பார்த்து இறந்தவர்களுக்கு பணம் தருவதில்லை, ஆனால் விஜய்யை பார்த்து இறந்தவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. விஜய் கூட்டத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அதனுடைய தாயை அழைத்து ரிசார்ட்டில் வைத்து சாப்பாடு போட்டு, பேமெண்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறார். வெளியில் வந்து அந்த பெண் தன்னுடைய குழந்தை இறந்து, விஜய்யை நேரில் பார்க்க வைத்தது என பேட்டி கொடுக்கிறார்.

தங்கள் வீட்டில் 9 பேர் இருக்கின்றனர். விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால், அவர்களை விஷம் வைத்து கொல்வேன் என மற்றொரு பெண் பேட்டி அளிக்கிறார். ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால் பெண்களும், இளைஞர்களும் தான் காரணம். இவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது. விஜய்யின் கூட்டத்திற்கு வரும் இளைஞர்களையும், பெண்களையும் பார்த்தால் தமிழ்நாடு என்னவாகிவிடும் என்ற கவலை இருக்கிறது. மக்களை ஆள நினைப்பவர்கள் மக்களோடு இருக்க வேண்டும். ஆனால் விஜய் கூட நிற்கும் பவுன்சர்களுக்கும், மக்களுக்கும் தண்ணீர் கூட கிடையாது. தனக்காக இறந்தவர்களை போய் பார்க்காத ஒரே தலைவர் விஜய்.
இவ்வாறு அவர் பேசினார்.

* ‘பொண்டாட்டி, பிள்ளைங்களே அவருக்கு ஓட்டு போட மாட்டாங்க…’
விந்தியா பேசுகையில்,‘கரூர் சம்பவத்தில் மட்டும் அரசியலாக்காமல் எடப்பாடியார் பேசவில்லை என்றால் விஜய்யின் ஜனநாயகன் மட்டுமல்ல, விஜய்யே வெளியே வந்திருக்க மாட்டார். விஜய் வெளியில் வராமல் வீடியோ காலில் அரசியல் செய்கிறார்.விஜய் வெளியில வருவதெல்லாம் இருக்கட்டும். முதலில் தன்னுடைய பொண்டாட்டி, பிள்ளைகள் தங்களுக்கு ஓட்டு போடுவார்களாக என பாருங்கள்.வாரிசு அரசியல் வேண்டாம் என விஜய் கூறுகிறார். வாரிசு முறை தவறு என கூற விஜய்க்கு அருகதை உள்ளதா, விஜய்யின் அப்பா இல்லை என்றால் விஜய் இல்லை. முதல் கூட்டத்திலேயே கூட்டணி சேருவோம், துணை முதல்வர் பதவி பெறுவோம் என்று கூறியவர் விஜய். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறார் என்றார்.

Tags : Vijay ,Vindhya Adhangam ,Vindhya ,Alapakkam Road ,Karamappakkam, Chennai ,
× RELATED வெளிநாட்டு நிதி பங்களிப்பு...