×

வேட்புமனு இல்ல… ஆனா நான்தாங்க தவெக வேட்பாளர்

அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனாவிடம் தவெக வேட்பாளர் கமலி நேற்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் தவெக வேட்பாளரிடம் வேட்பு மனு எங்கே? கொடுங்கள் என்றார். அதற்கு வேட்பாளர் வேட்பு மனுவை கொண்டு வரவில்லை என்றார். அதிர்ச்சியடைந்த தேர்தல் அலுவலர் வேட்பு மனுயின்றி எப்படி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தீர்கள் என்று கேட்டார். இதையடுத்து உடன் வந்தவர்களிடம் எனது வேட்பு மனு எங்கே என கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் நீங்கள் மனுவை நிரப்பினால் தான் கொண்டு வர முடியும் மனுவை நிரப்பாமல் எப்படி கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேர்தல் அலுவலர் வேட்பு மனுவுடன் உள்ளே வர வேண்டும். இல்லை என்றால் வெளியில் செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து மிகுந்த அவமானத்துடன் வேட்பாளர் கமலி அந்த அறையை விட்டு வெளியில் வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தார். பின்பு ஒரு மணி நேரம் கழித்து வேட்பு மனு எழுதி கொண்டு வந்தவுடன் வேட்பு மனுவை கொடுத்து விட்டு சென்றார். வேட்பு மனு இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக வேட்பாளரை அங்கிருந்தவர்கள் பார்த்து காலத்தின் கொடுமை இன்னும் என்னவெல்லாம் பார்க்க போகிறோமோ என தலையில் அடித்துக்கொண்டு சென்றனர்.

* மக்களுக்கு நன்றி சொல்ல வராதவரு… வெட்கத்தில் சாத்தூரு மாறிட்டாரு நயினாரு… நெல்லை திமுக வேட்பாளர் சுப்பிரமணியன்
1. பாஜ மாநில தலைவரும், சிட்டிங் எம்எல்ஏவுமான நயினார், நெல்லை தொகுதியை விட்டு வெளிமாவட்டத்துக்கு சென்றது ஏன்? தொகுதிக்கு எதுவும் செய்யாததால் சென்றாரா?
கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட மக்களைச் சந்திக்கவில்லை. அவருடைய எம்எல்ஏ அலுவலகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவர். எனவே, அவரே கூச்சப்பட்டு, வெட்கப்பட்டு, இந்தத் தொகுதியில் நின்றால் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தில்தான் சாத்தூருக்குச் சென்றுவிட்டார்.

2. நெல்லையில் இந்த முறை திமுக vs அதிமுக நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது? களம் நிலவரம் எப்படி இருக்கு?
நெல்லையை பொறுத்தவரை எப்போதும் திமுகவின் கள நிலவரம் சிறப்பாகவே இருக்கும். குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவரின் சாதனைகள் மற்றும் பல்வேறு திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகளாவது இருப்பார்கள். எனவே, இந்தத் தேர்தலில் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும்.

3. தவெகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.முருகன் அதிமுகவின் விசுவாசியாக வலம் வந்தவர். திடீரென தவெகவில் சேர்ந்து உள்ளார்? இவர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களும் உள்ளது. இவர் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பார் என்று கூறப்படுகிறதே?
அதிமுகவில் இருந்தபோது ஓ.பி.எஸ்ஸின் பினாமியாகச் செயல்பட்டார். அப்போது கொள்ளையடித்த பணத்தைத்தான் இப்போது பிஜேபியின் பினாமியாக இருந்து செலவு செய்கிறார். ஏற்கனவே அவர் மீது பல வரி ஏய்ப்புப் புகார்கள் உள்ளன. பிஜேபியிடமிருந்து தப்பிப்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

4. பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வீடு வீடாக சென்று வாக்கு சேரித்து வருகிறீர்கள். திமுக அரசு செய்த திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்.?
மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. முதல்வரின் திட்டங்களை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களிடம் எழுச்சியான வரவேற்பு உள்ளது. திமுக தலைவர் சொன்னது போல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி இந்த முறை அமோக வெற்றி பெறும்.

Tags : Thaveka ,Kamali ,Kalpana ,Avinashi taluka ,
× RELATED வெளிநாட்டு நிதி பங்களிப்பு...