×

சொன்னாரு..! செஞ்சாரு..!! ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்’

சொன்னாரு: திமுக 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிடும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டமே ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’. ‘பொருளாதாரச் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்’ என்ற அம்பேத்கரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, 2023 ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பயனாளிகளை தொழிலாளிகளாக அல்லாமல், தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்கும் ‘முதலாளிகளாக’ உயர்த்துவது, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பை அதிகரிப்பது, தொழில் தொடங்க தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒரே இடத்தில் வழங்குவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள் மிகக் குறிப்பிடத்தக்கவையாக திட்ட மதிப்பீட்டில் (Project Cost) 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, வங்கிகள் மூலம் பெறப்படும் கடன்களுக்கு 6 சதவீத வட்டி மானியம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இது தொழில் முனைவோரின் கடன்சுமையைப் பெருமளவு குறைக்கிறது. இத்திட்டத்தில் சேர எவ்விதமான குறைந்தபட்ச கல்வித் தகுதியும் நிபந்தனையாக விதிக்கப்படவில்லை என்பது இதன் மிகப்பெரிய சிறப்பாகும். தற்போது இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்களை இத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தொழில் மேலாண்மை குறித்த சிறப்புப் பயிற்சிகளும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், தகுதியுள்ள நபர்களுக்கு உடனுக்குடன் மானியம் சென்றடைகிறது. அண்ணல் அம்பேத்கரின் பெயரை தாங்கி நிற்கும் இத்திட்டம், வெறும் நிதி உதவித் திட்டமாக இல்லாமல், ஒரு சமூக மாற்றத்திற்கான கருவியாகத் திகழ்கிறது. ‘சொன்னதைச் செய்வோம்’ என்ற அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த வாக்குறுதி, இன்று பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களைத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்குதாரர்களாக மாற்றியுள்ளது.

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) வாணியம்பாடி, வேலூர்
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) கோயம்புத்தூர்
மு.வீரபாண்டியன்
(சிபிஐ மாநில செயலாளர்) கோவில்பட்டி
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) காட்டுமன்னார்கோவில்
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) குடியாத்தம்
அன்புமணி
(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்
(தமாகா தலைவர்) சென்னை
சீமான்(நாதக
ஒருங்கிணைப்பாளர்) பல்லடம்,
தாராபுரம்
டி.டி.வி.தினகரன்
(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) சென்னை

Tags : Sencharu ,Annal Ambedkar Industrial ,DMK 2021 ,MK Stalin ,Adi Dravidian ,
× RELATED வெளிநாட்டு நிதி பங்களிப்பு...