×

மிச்சிகன் யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதலுக்கு முயன்றவர் ஹிஸ்புல்லா ஆதரவாளர்: எப்பிஐ தகவல்

டெட்ராய்ட்: அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள டெம்பிள் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 12ம் தேதி லாரியில் வந்த ஒரு நபர் இந்த தலத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அய்மன் அலி கசாலி (41) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் லாரியை வேகமாக ஓட்டி காவலாளி ஒருவரை ஏற்றி கொன்றார். பின்னர் மற்றொரு காவலாளியுடன் துப்பாக்கி சண்டை நடத்திய, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.

அப்போது வழிபாட்டு தலத்தில் இருந்த 150 குழந்தைகள், ஊழியர்கள் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அய்மன் கசாலி, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவாளர் என்பதை எப்பிஐ புலனாய்வு அமைப்பு நேற்று உறுதி செய்துள்ளது. தாக்குதல் முயற்சிக்கு 10 நிமிடத்திற்கு முன்பு வெளிநாட்டில் உள்ள தனது சகோதரிக்கு கசாலி அனுப்பிய 2 வீடியோவில், ‘மிச்சிகனில் இஸ்ரேலியர்கள் கூடும் மிகப்பெரிய இடம் இதுதான். நான் லாரியில் கண்ணிவெடி வைத்துள்ளேன். வழிபாட்டு தலத்தில் உள்ளே நுழைந்த அவர்களை சுடுவேன். என்னால் முடிந்தவரை பலரை கொல்வேன்’’ என கூறி உள்ளார்.

Tags : Hizbullah ,Michigan ,FBI ,Detroit ,Temple Israel ,United States ,Ayman Ali Kasali ,
× RELATED இந்தோனேஷியாவில் நடுக்கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் 21 பேர் மீட்பு