×

திருக்கோவிலூரில் தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளர் மீது வழக்கு

திருக்கோவிலூர், மார்ச் 29: திருக்கோவிலூர் அடுத்த தேவனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பா (எ) பழனிச்சாமி. அதிமுக திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர். இந்நிலையில் நேற்று வேட்பாளர் பழனிச்சாமி தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக பிரசாரம் செய்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சந்திரசேகரன் கொடுத்த புகாரின்பேரில் வேட்பாளர் பழனிச்சாமி மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,Thirukovilur ,Palaniappa (A) Palaniswami ,Devanur ,Palaniswami ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி