அரியலூர், மார்ச் 29: சமூக வலைதளங்களில் பரவும் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை என்ற வதந்திகளை நம்பாதீர்கள் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், எரிவாயு விநியோகம் தொடர்பாக எரிவாயு முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், எரிவாயு உருளை தட்டுபாடு குறித்து பொதுமக்கள் பயப்படவோ அவசரபடவோ வேண்டாம் எனவும், வீடுகளுக்கான எல்ஜிபி உருளை தேவையான அளவு இருப்பில் உள்ளது. தேவையின்றி அதிகமாக முன்பதிவு செய்வதை தவிர்க்கவும் தெரிவிக்கப்படுகிறது.
வணிகம் சார்ந்த எரிவாயு உருளைகள் அவ்வபோது வரத்து பெற்று சீராக விநியோகம் செய்யப்படுகிறது. எனவே எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை தொடர்பான சமூக வலைதளங்களில் வெளிவரும் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை பின்பற்றி பயன்பெறுமாறும், எரிவாயு தொடர்பான புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்.04329-228709-ஐ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவ ட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தேன்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் யோகஜோதி, மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள், எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
