×

100 சதவீதம் வாக்களிப்போம்… தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா

 

திருச்சி, மார்ச் 29: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொது தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாவட்ட தோ்தல் அலுவலா் மாவட்ட கலெக்டர் சரவணன் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகளின் விபரம்.

139 – ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில்: ரங்கம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் தோ்தல் விழிப்புணா்வு பதாகை வைக்கப்பட்டு பக்தா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
141- திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில்: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சீத்தாலெட்சுமி ராமசாமி கல்லூரி மாணவியா்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பொன்மலை மண்டல அலுவலகத்தில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இரவில் ஒலிரும் பொிய பலூன் கட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் வீரா்கள் நீச்சல் குளத்தில் 100 சதவிகித வாக்குபதிவை வழியுறுத்தும் விதமாக விழிப்புணா்வு ஏற்படுத்தினர்.

143 – லால்குடி சட்டமன்ற தொகுதியில்: லால்குடி சட்டமன்ற தொகுதியில் புள்ளம்பாடி பேரூராட்சியில், பேரூராட்சி அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான பேரணி நடைபெற்றது. லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடி நகர பகுதியில் வாரச்சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வருவாய் துறை அலுவலா்களால் வழங்கப்பட்டது. லால்குடி சட்டமன்ற தொகுதியில் பூவாளூர் பேரூராட்சியில், பேரூராட்சி அலுவலகம் முன்பு தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான வண்ணக்கோலங்கள் வரைந்து பேரூராட்சி பணியாளா்கள் மனித சங்கிலி நடத்தினர்.

146 -துறையூா் சட்டமன்ற தொகுதியில்: துறையூர் சட்டமன்ற தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பச்சைமலை தென்பறநாடு ஊராட்சியில் பழங்குடியினா் நல உண்டுஉறைவிடப்பள்ளி மாணவா்களால் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. துறையூர் சட்டமன்ற தொகுதியில் கண்ணனூர் ஊராட்சியில் மாவட்ட மகளிர் திட்ட முகமையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினா்களை கொண்டு வண்ணக்கோலங்கள் வரைந்து, பேரணி சென்று தோ்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு தொிவித்தனா்.

 

Tags : Tamil Nadu ,Trichy ,Election Commission of India ,2026 Tamil Nadu Legislative Assembly General Election ,District Election Officer ,
× RELATED முசிறி சப்-கலெக்டர் ஆய்வு: மின்னணு இயந்திரங்களை கையாளுவது எப்படி?