×

தவெக நிர்வாகிகளுடன் சந்திப்பு காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சஸ்பெண்ட்: செல்வப்பெருந்தகை நடவடிக்கை

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பணிகளில் காங்கிரசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, தவெகவில் ஒரு சில நிர்வாகிகள் இணையப் போவதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் டி.செல்வம் என்பவரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் தவெகவில் இணைய உள்ளதாகவும், அதற்காக கட்சியினர் சிலரை அழைத்து செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் வெளியான புகார்களை தொடர்ந்தே தமிழக காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Tevag ,Congress ,state ,Selvapperundhakai ,Chennai ,Congress party ,DMK ,state general secretary ,Tamil Nadu Congress party… ,
× RELATED முதல் கட்டமாக 23 பேர் அறிவிப்பு அதிமுக...