சென்னை: திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பழ.நெடுமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ.நெடுமாறனுக்கு நன்றி. தமிழ்நாட்டை சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
