×

28 தொகுதிகளை அடையாளம் காண பேச்சுவார்த்தை காங்கிரசில் பெரும்பாலான தொகுதிகள் உறுதியாகிவிட்டது: திமுக குழுவை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: காங்கிரஸ் போட்டியிட உள்ள 28 தொகுதிகள் எவை என்பது குறித்து, திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதியின் பட்டியலைப் திமுக குழுவிடம் வழங்கினர்.

காங்கிரஸ் வழங்கிய பட்டியலில் இருந்த பெரும்பாலான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. சில தொகுதிகள் மட்டும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பின்னர் வெளியில் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாங்கள் கேட்ட தொகுதியை அவர்கள் கேட்டார்கள். அவர்கள் கேட்ட தொகுதியை நாங்கள் கேட்டோம். ஒருசில தொகுதிகள் அவ்வாறு உள்ளது. சென்னையிலும் தொகுதியை கேட்டுள்ளோம். தொகுதியின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் வாங்குவோம். நான் தொகுதி மாறுவதாக எங்கெங்கும் சொல்லவில்லை. நான் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்’’ என்றார்.

* புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளை திமுக ஒருங்கிணைத்து வருகிறது; கிரிஷ் சோடங்கர் பேட்டி
அண்ணா அறிவாலயத்தில் திமுக உடன் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கூட்டணி சுமுகமாக உள்ளது. சில தொகுதிகளில் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளையும் திமுக ஒருங்கிணைத்து வருகிறது. எந்த பிரச்னையும் இல்லை. தேர்தலில் ஒன்றாக களமாடி, ஆட்சியை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. மக்கள் விரும்பும் அரசு உருவாகும். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக, வலுவாக உள்ளது. புதுவை மற்றும் தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாற அவர் கூறினார்.

Tags : Congress ,Dimuka committee ,Chennai ,Krish Sodankar ,Tamil Nadu ,Chief Officer ,Krish Sodangar ,Congress Negotiating Committee ,Tamil Nadu Congress ,President ,Assembly Congress Party ,
× RELATED எந்தெந்த தொகுதிகள்; மமகவும் பேச்சுவார்த்தை