×

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3ம் முறையாக கண் அறுவை சிகிச்சை

லாகூர்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான்(73) பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2023ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானின் வலது கண்ணில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பார்வை திறன் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே 2 முறை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3ம் முறையாக இம்ரான் கானின் வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடந்தது.

Tags : Pak ,Imran Khan ,Lahore ,Pakistan Tehreek-e-Insaf Party ,Pakistan ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின்...