×

அணைந்தமாடன்பச்சேரி பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா

குளத்தூர், மார்ச் 17: அணைந்தமாடன்பச்சேரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சிக்குட்பட்ட அணைந்தமாடன்பச்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதில் பிடிஓ வெங்கடாசலம், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, உதவி பொறியாளர் காயத்ரி, ஊராட்சி செயலர் பழனி முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் பாலமுருகன், ராபின், ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Damanthamadaanbachcheri School ,Kulathur ,Shanmugaiah MLA ,Panchayat Union Middle School ,Damanthamadaanbachcheri ,Tharuvaikulam Panchayat of Ottapidaram Panchayat Union ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்