கந்தர்வகோட்டை, மார்ச் 16: கந்தர்வகோட்டை சட்டமன்ற அலுவலகதை பூட்டி சீல் வைத்து கட்சி விளம்பரதை வர்ணம் பூசி அழிந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் தலைமையிடம் ஆகும். இங்கு உள்ள சட்டமன்ற அலுவலக கட்டிடத்தில் அலுவலகம் அமைந்து சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பணி செய்தும் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கபட்ட நிலையில் உடனடியாக தேர்தல் நடந்தை விதிமுறை அமலுக்கு வந்தது.
அதனை தொடர்து தேர்தல் ஆனைத்தில் அறிவுறுத்தல் படி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்படி மாவட்ட ஆதிதிராவிட அலுவலரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி, வட்டாச்சியர் பரணி வழிகாட்டுதல் பேரில் கந்தர்வகோட்டை மண்டல துணை வட்டாட்சியர் பழனிசாமி, வருவாய் ஆய்வளர் சந்தோஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முரளி, கிராம உதவியளார் செந்தில் ஆகியோர் கந்தர்வகோட்டை சட்டமன்ற அலுவகதை பூட்டி சீல் வைத்தனர். மேலும் பொது சுவர், அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை வர்ணம் பூசி அழிந்தனர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் வருவாய் ஆய்வளர் சந்தோஷ்குமார், விஏஒ முரளி ஈடுபட்டனர்.
