- ஜனநாயக மகளிர் சங்கம்
- கில்வேலூர்
- நாகப்பட்டினம் யூனியன் மார்க்கெட் தெரு
- யூனியன் அரசு
- நாகப்பட்டினம் மகளிர் சங்கம்...
கீழ்வேளூர், மார்ச் 15: நாகப்பட்டினம் ஒன்றியம் சிக்கல் கடைவீதியில் நேற்றுமுன்தினம் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், சிலிண்டருக்கு ரூ.60 விலை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க நாகை வடக்கு ஒன்றிய தலைவர் விமலா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து கோஷங்களை எழுப்பினர்.இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுபாதேவி, ஒன்றிய செயலாளர்கள் மாலா, தமிழ் செல்வி தெற்கு ஒன்றிய தலைவர் குமுதா உள்ளிட்ட மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
