- திருப்புத்தூர்
- வி.எஸ்.சிவா.
- அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு மையம்
- பூலாங்குறிச்சி
- ஆர்.சி.ஐ.டி மருந்து நிறுவனம்
- செங்கல்பட்டு
திருப்புத்தூர், மார்ச் 13: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி வேலை வாய்ப்பு மையத்தின் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டில் உள்ள ஆர்சிட் ஃபார்மா நிறுவனம் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். இதில் 300 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிகளுக்கு ஏற்ப விரைவில் நியமன ஆணை வழங்கப்படும். இவ்வேலை வாய்ப்பு முகாமை கல்லூரி வேலைவாய்ப்பு மைய அலுவலர் முனைவர் ரமேஷ் ஏற்பாடு செய்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆனந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்நிறுவனத்தின் சார்பில் மனிதவள மேம்பாட்டுத் துணை மேலாளர் கருணாகரன் மற்றும் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்களான முத்துராமன், இளையராஜா, சஞ்சீவ் குமார், முருகேசன், பாலசுப்ரமணியன், பொன் கார்த்திக்கு ராஜு, மற்றும் ராகவன் ஆகியோர் மேற்கொண்டனர்.
