×

சூரத்தில் இருந்து கர்னூலுக்கு பசுமை விரைவு சாலை

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு புதிய பசுமை விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படும்.சூரத்தில் இருந்து நாசிக், அகமது நகர், சோலாப்பூர் பகுதி வழியாக கர்னூலை இந்த சாலை இணைக்கும். இந்த சாலை அமைக்கப்பட்டால் கர்னூலில் இருந்து சென்னை,கன்னியாகுமரி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல எளிதாக இருக்கும். இந்த சாலை அமைக்கப்பட்டால் டெல்லியில் இருந்து சென்னைக்கான தூரம் 320 கிமீ வரை குறையும்.இது செலவைக் குறைக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Green Expressway ,Surat ,Kurnool ,New Delhi ,Union Minister ,Nitin Gadkari ,Question Hour ,Rajya Sabha ,Gujarat ,Andhra Pradesh ,Nashik ,Ahmednagar ,Solapur ,Kurnool… ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...