×

கேரளாவில் 100 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ராகுல் காந்தி உறுதி

 

புதுடெல்லி: கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரேகட்டமாக பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முன்னாள் கேரள கேபினட் அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரும், கண்ணூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.சுதாகரன் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு கட்சி தலைமை மறுத்து விட்டதாகவும், இதனால் சுதாகரன் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வௌியாகின.

இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை கே.சுதாகரன் தனது குடும்பத்தினருடன் நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோரை கே.சுதாகரன் இன்று(நேற்று) சந்தித்தார். அவர் புயல், மழை, வௌ்ளம் போன்ற சவால்களில் கேரள மக்களுக்காக உழைத்தார். அவர் ஒரு உண்மையான காங்கிரஸ் விசுவாசி.

உண்மையான காங்கிரஸ் சிப்பாயின் விசுவாசமு்ம், வலிமையும் அவரிடம் உள்ளது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மிக வலுவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் 100 தொகுதிகளுடன் அமோக வெற்றியை பெறும். அந்த இலக்கை அடைவதை நோக்கி செல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Tags : Congress ,Kerala ,Rahul Gandhi ,New Delhi ,Cabinet ,Minister ,president ,Lok Sabha ,Kannur ,K. Sudhakaran ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...