×

மம்தா மருமகன் மேடையில் தீ

 

சூரி: மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் லாம்பூர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்திற்காக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி சென்று இருந்தார். அந்த பிரசார கூட்டம் முடிந்த நிலையில் மேடையின் ஒரு மூலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மேடையிலிருந்து பானர்ஜியும் மற்ற தலைவர்களும் கீழே இறங்கி, கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, ​​மேடையின் தூண்களில் ஒன்றிலிருந்து தீப்பற்றி எரிந்தது.

Tags : Mamata ,Suri ,Trinamool Congress ,Abhishek Banerjee ,Lambur ,West Bengal ,Birbhum district ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...