×

மேற்குவங்கத்தில் பலர் இடமாற்றம்; திரிணாமுல் காங். தொண்டர்கள் போல் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு

 

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘மேற்குவங்கத்தில் உள்ள பல அதிகாரிகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களைப் போலவே செயல்பட்டதாகவும், அவர்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில்,’ நாடு முழுவதும், தேர்தல் ஆணையம் தேர்தல்களுக்கு முன்னதாகவே அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் மேற்கு வங்கத்தில், பெரும்பாலான அதிகாரிகள் அரசுக்காகவே பணியாற்றுகின்றனர். அதனால்தான் இங்கு அதிக அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மாற்றப்பட்டதன் காரணமாகவே, இந்த ஆண்டு மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது வன்முறை குறைவாக இருந்தது. எஸ்ஐஆர் பணி மேற்குவங்கத்தில் மட்டுமே சர்ச்சையில் சிக்கியது. இந்த பணிக்காக, மேற்கு வங்கத்தில் மட்டும் நீதிமன்றம் ஏன் நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது? இடதுசாரி முன்னணி ஆளும் கேரளாவிலோ அல்லது திமுக ஆளும் தமிழ்நாட்டிலோ ஏன் இத்தகைய சிக்கல்கள் எழவில்லை? இங்கு உள்ள கலெக்டர்களால் அச்சமின்றிப் பணியாற்ற முடியவில்லை’ என்றார்.

இடதுசாரி முன்னணி ஆளும் கேரளாவிலோ அல்லது திமுக ஆளும் தமிழ்நாட்டிலோ ஏன் இத்தகைய சிக்கல்கள் எழவில்லை?

Tags : West Bengal ,Trinamool Congress ,IAS ,IPS ,Amit Shah ,Kolkata ,Union Home Minister ,Trinamool Congress party ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...