×

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்க்க மோடிக்கு தைரியம் இல்லை: காங்கிரஸ் கடும் தாக்கு

 

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “கடந்த 4 வாரங்களாக உலக நாடுகளின் பார்வை ஹார்முஸ் நீரிணை, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதுதான் உள்ளன. இந்த நேரத்தில் காசா மக்கள் மீதான கொடூரங்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. தெற்கு லெபனானில் தனக்கான பெரிய இடைநிலை மண்டலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. மேற்குக்கரையை ஆக்கிரமிதது இணைத்து கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரமாக செய்கிறது.

சில நாள்களுக்கு முன்புதான் 1967ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் பெரும்பகுதியை நிலப்பதிவு செய்ய இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் சொத்துகளை விட்டு, வௌியேற வேண்டியிருக்கும். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக குரல் கொடுக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை” என விமர்சித்துள்ளார்.

Tags : Modi ,Israel ,Palestine ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Hormuz Strait ,Gulf ,Gaza ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...