×

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு இலகு ரக இயந்திர துப்பாக்கிகள்

 

குவாலியர்: இந்திய ராணுவத்திற்கு அதானி பாதுகாப்பு துறை நிறுவனம் தயாரித்த 2000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் வழங்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் குவாலியரின் புறநகரில் அமைந்துள்ள அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சிறு ஆயுத தயாரிப்பு வளாகத்தில் பிரஹார் வகை இலகு ரக இயந்திரத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. 7.62மி.மீ அளவு கொண்ட இந்த இயந்திரத் துப்பாக்கிகள் மொத்தம் 40ஆயிரம் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்ததில் இருந்து ஆறு ஆண்டுகளுக்குள் முதல் கட்டமாக இயந்திர துப்பாக்கிகளை வழங்க வேண்டிய நிலையில், 11 மாதங்களுக்கு முன்னதாக நேற்று அவை வழங்கப்பட்டன. 2000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு தலைமை இயக்குனர் அன்பரசு, அதானி டிபென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ராஜ்வன்ஷி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவத்திற்காக துப்பாக்கிகளை எடுத்துக்செல்லும் வாகனத்தை அன்பரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags : Gwalior ,Indian Army ,Adani Defense ,Aerospace Small Arms Company ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...