×

தர்மபுரி மாவட்டத்தில் பிடிஓ.,க்கள் இடமாற்றம்

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ.,க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தர்மபுரி பிடிஓ குமரேசன், அரூர் பிடிஓவாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரூர் பிடிஓ அப்துல் ஆசாத், தர்மபுரி பிடிஓவாகவும், கடத்தூர் பிடிஓ செல்வன், பாலக்கோடு பிடிஓவாகவும், பாலக்கோடு பிடிஓ ரேணுகா, ஏரியூர் பிடிஓவாகவும், ஏரியூர் பிடிஓ நீலமேகம், பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓவாகவும், பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ மார்கரெட், பாலக்கோடு பிடிஓவாகவும், பாலக்கோடு பிடிஓ கல்பனா, கடத்தூர் பிடிஓவாகவும், காரிமங்கலம் பிடிஓ தனலட்சுமி, பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓவாகவும், பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ அறிவழகன், காரிமங்கலம் பிடிஓவாகவும், பென்னாகரம் பிடிஓ சக்திவேல், காரிமங்கலம் பிடிஓவாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள், புதிய நபர்களை எதிர்பாராமல் புதிய பணியிடத்தில் உடன் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தொடர்புடைய அலுவலர்கள் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொண்டமைக்கான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Dharmapuri district ,Dharmapuri ,Block Development Officers ,BDOs ,PDO Kumaresan ,Aroor PDO ,Aroor ,PDO Abdul Azad ,Dharmapuri PDO ,Kaddur PDO Selvan ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்