×

புதுக்கோட்டை மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ

 

புதுக்கோட்டை, மார்ச் 11: புதுக்கோட்டையில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வெளியேறிய புகை காரணமாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாநகராட்சி திருக்கட்டளை சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விடிய விடிய தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர். இருந்த போதிலும் நேற்று காலை வரை அந்த குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறியது. இந்த புகையினால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், திருக்கட்டளை -புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகங்களை மூடியபடி சென்றனர். சிலர் புகையால் பாதிக்கப்பட்டனர்.

Tags : Pudukkottai Corporation ,Pudukkottai ,Thirukattala Road ,
× RELATED தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்