- நத்தம்
- திண்டுக்கல்
- முருகராஜ்
- கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி
- நாதம் உராடச்சி யூனியன் அலுவலகம்
- திண்டுக்கல் மாவட்டம்
நத்தம், மார்ச் 3: நத்தத்தில் பைக் திருடிய இளைஞர, திண்டுக்கல் அருகே போலீசார் கைது
செய்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர் முருகராஜ் (47). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தனியார் இருசக்கர வாகனம் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பிப்.24ம் தேதி இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு நத்தம் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் அதிகாலை வந்து பார்த்த போது கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து முருகராஜ் நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆய்வாளர் மலைச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் உதவியுடன் டூவீலர் திருடிய திண்டுக்கல்லை அடுத்த முத்தழகுபட்டியை சேர்ந்த ஜெபாஸ்டின் ஜான்சன்பிரபு (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து டூவீலரும்பறிமுதலானது.
