×

நத்தத்தில் டூவீலர் திருட்டு

நத்தம், மார்ச். 2: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்தவர் முருகராஜ் (47). நத்தம் அண்ணா நகரில் தங்கி யூனியன் அலுவலகம் அருகேயுள்ள டூவீலர் விற்பனை நிலையத்த்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்.24ம் தேதி இரவு வேலை முடிந்த பின் கடையின் முன் டூவீலரை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகராஜ் அளித்த புகாரின் பேரில் நத்தம் எஸ்ஐ மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Natham ,Murukaraj ,Karur district, Aravakurichi ,Natham Anna ,Duwheeler ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்