கொல்கத்தா: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்துள்ளார்.
