- இமயமலை
- இந்தியா
- ஆஸ்திரேலிய வீரர்களான
- ஹோபார்ட்
- இந்திய பெண்கள்
- ஆஸ்திரேலியா மகளிர்
- அலிசா ஹீலி
- பாப் லிட்ச்ஃபீல்ட்
- லிட்ச்ஃபீல்ட்
ஹோபர்ட்: இந்தியா மகளிர் – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி ஹோபர்ட் நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீராங்கனைகளாக கேப்டன் ஆலிஸா ஹீலி, போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். லிட்ச்பீல்ட் 14 ரன்னிலும் அடுத்து வந்த ஜார்ஜியா வால் 62 ரன்னிலும் வீழ்ந்தனர். இருப்பினும் ஆலிஸா சிறப்பாக ஆடி 98 பந்துகளில் 2 சிக்சர், 27 பவுண்டரிகளுடன் 158 ரன் குவித்து அவுட்டானார்.
அவரைப் போல் சிறப்பாக ஆடி 84 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய பெத் மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் ஆஸி மகளிர் 7 விக் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தனர். பின், இமாலய இலக்கை நோக்கி இந்திய துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.
மந்தனா ரன் எடுக்காமலும் பிரதிகா 27 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிகஸ் 42, ஸ்நேஹ் ராணா 44 ரன் எடுத்தார். 45.1 ஓவரில் இந்திய மகளிர் 224 ரன்னுக்கு ஆல் அவுட்டாகினர். அதனால், ஆஸி மகளிர், 185 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸி கைப்பற்றி உள்ளது.
