×

உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று தெ.ஆ கலக்கல் வெற்றி

டெல்லி: உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நேற்று, ஜிம்பாப்வே அணியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று, குரூப் 1 பிரிவு போட்டி, டெல்லியில் நேற்று நடந்தது. அதில் ஜிம்பாப்வே – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்கள் டடிவனஷே மருமணி 7, பிரையன் பென்னட் 15 ரன்னில் வீழ்ந்தனர்.

அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் சிக்கந்தர் ராஸா மட்டும் சிறப்பாக ஆடி 43 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 73 ரன் விளாசினார். 20 ஓவரில் ஜிம்பாப்வே அணி, 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர், எளிய இலக்குடன் தென் ஆப்ரிக்காவின் கேப்டன் அய்டன் மார்க்ரம், குவின்டன் டிகாக் களமிறங்கினர்.

டிகாக் ரன் எடுக்காமலும், மார்க்ரம் 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். அடுத்து இணை சேர்ந்த ரையான் ரிக்கெல்டன் (31 ரன்), டெவால்ட் புரூவிஸ் (42 ரன்) சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (22 ரன்), டிரிஸ்டன் ஜார்ஜ் லிண்டே (30 ரன்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை, 17.5 ஓவரில் 5 விக் இழப்புக்கு 154 ஆக உயர்த்தி, 5 விக் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.

Tags : South Africa ,World Cup Super 8 round ,Delhi ,Zimbabwe ,World Cup Super 8 ,Zimbabwe… ,
× RELATED டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ்...