×

அரையிறுதி வாய்ப்பை இழந்து நடையை கட்டியது; டாஸ் வென்றிருந்தால் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும்: பாக். கேப்டன் சொல்கிறார்

பல்லேகல்லே: டி.20 உலககோப்பையில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2ல் பல்லேகல்லேவில் நேற்றிரவு நடந்த கடைசி போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை மோதின. முதலில் பேட்செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன் எடுத்தது. சாஹிப்சாதா ஃபர்ஹான் 100, ஃபகார் ஜமான் 84 ரன் அடித்தனர். பின்னர் இலங்கை அணியை 147 ரன்னுக்குள் சுருட்டினால் அரையிறுதிக்கு தகுதிபெறலாம் என்ற நிலையில் பாகிஸ்தானின் முயற்சி பலன் அளிக்கவில்லை. 20 ஓவரில் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் எடுத்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.குரூப் 2ல் முதலிடம் பிடித்த இங்கிலாந்தும், ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்தும் அரையிறுதிக்குள் நுழைந்தன.

வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது: பனிப்பொழிவு இருக்கும் போது, டாஸ் இழந்தால் எப்போதும் சவாலாகவே இருக்கும். டாஸ் வென்றிருந்தால் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். பனிப்பொழிவு ஒரு காரணியாக இருந்தது. எங்களால் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. போட்டி முழுவதும் எங்களால் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. ஃபர்ஹானுக்கு கூடுதல் ஆதரவு இருந்திருந்தால், அது சிறப்பாக இருந்திருக்கும். சில வருடங்களாக மிடில் ஆர்டர் ஒரு பிரச்சனையாக உள்ளது, அதை நாம் கவனிக்க வேண்டும். நாங்கள் விரும்பியபடி முடிக்க முடியவில்லை. 18 ஓவர் நன்றாக பேட்டிங் செய்தோம், கடைசி 2 ஓவரில் இலங்கை சிறப்பாக செயல்பட்டது. 160 ரன்களை கூட தற்காத்துக் கொள்வது கடினமாக இருந்திருக்கும்,” என்றார்.

Tags : Pallekele ,Pakistan ,Sri Lanka ,T20 World Cup Super 8 round ,Sahibzada Farhan 100 ,Fakhar… ,
× RELATED டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ்...