×

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கூட்டம்

தர்மபுரி, பிப்.28: தர்மபுரியில், அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காவேரி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் அங்கம்மாள், ராணி, இணை செயலாளர் காந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓய்வூதியத்தை உயர்த்தியதுடன், பஞ்சப்படியை சேர்த்து வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 ஆக உயர்த்தி வழங்கவேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, இலவச காப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : Nutritious Anganwadi Pensioners' Meeting ,Dharmapuri ,All Nutritious Anganwadi Pensioners' Association ,Mallika ,District secretary ,Kaveri ,Angammal, ,Rani ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்