சிவகாசி, பிப்.28: திருத்தங்கல்லில் டூவீலர் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் செபஸ்டின் மனைவி செசில்யா அம்மாள்(65). இவர் சம்பவத்தன்று திருத்தங்கல் மெயின் ரோட்டில் திருமண மண்டபத்தின் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த திருத்தங்கல் வடக்குரத வீதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சிவா(19) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மூதாட்டி செசில்யா மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விபத்துக்கு காரணமான வாகனத்தை ஓட்டி வந்த சிவா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
