×

நல வாரிய பலன்களை வழங்ககோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

உடுமலை, பிப். 28: உடுமலை தாலுகா பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் உடுமலை தொழிலாளர் உதவிஆய்வாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நலவாரிய ஆன்லைன் பதிவுகளை தன்னிச்சையாக நீக்குவதை கண்டித்தும், நலவாரிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதிய பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு சிஐடியு உடுமலை தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி டெய்லர் சங்க செயலாளர் ரத்தினசாமி, மாற்றுத்திறனாளி சங்க தலைவர் மாலினி, சிடிசி சங்க பொறுப்பாளர் விஸ்வநாதன், நடைபாதை சங்க மாநில குழு பாபு, கட்டுமான சங்க செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

 

 

Tags : CITU ,Udumalai ,Assistant Inspector ,Udumalai Taluka General Workers Union ,
× RELATED வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் வைக்க அறிவுறுத்தல்