கூடலூர், பிப்.28: கூடலூரில் மின்னணு வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையாளர் முத்துலட்சுமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வாகனத்தில் இருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்குப்பதிவு செயல்முறை மூலம் புதிய வாக்காளர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை தயக்கமின்றி, பதட்டமின்றி வாக்குச்சாவடிகளில் செலுத்த இந்த நடைமுறை பயனுள்ளதாக இருந்தது என்றனர்.
