×

ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

உடுமலை, பிப். 28: ஊதிய உயர்வு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர் கழகம், தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம், பொறியாளர் சங்கம், பொறியாளர் யூனியன், சிஐடியு, டிஎன்இபிஎப், ஏஐஎஸ்யு மற்றும் ஐக்கிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Udumalai ,Tamil Nadu Electricity Generation and Distribution Corporation Trade Unions ,Udumalai Electricity Distribution Circle Superintending Engineer’s Office… ,
× RELATED வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் வைக்க அறிவுறுத்தல்