- உல்லாடா கிராமம்
- ஊட்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- கணேஷ்
- கேத்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுற்றுலாத்துறை அமைச்சர்
- நீலகிரி மாவட்டம்
- கேத்தி நகரம்
- உல்லாடா…
ஊட்டி, பிப். 28: சுற்றுலாத்துறை சார்பில் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட உல்லாடா கிராமத்தில் ரூ.1.8 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட கிராமிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளை ஊட்டி எம்எல்ஏ கணேஷ் திறந்து வைத்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி உல்லாடா கிராமத்தில், ரூ.25 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்படும்.
ரூ.3.88 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். ரூ.8.13 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படும். ரூ.11.92 லட்சம் மதிப்பில் வடிகால் உட்பட பல்வேறு பணிகள் ரூ.1.8 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் முன்னிலை வகித்தார். ஊட்டி எம்எல்ஏ கணேஷ் இந்த பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் யுவராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
