திருச்சுழி, பிப்.28: திருச்சுழியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.
திருச்சுழியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் இராஜராஜேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பங்கஜம்(திருச்சுழி(பொ)), முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழு தலைவர் பொன்னுதம்பி, சந்தனபாண்டியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
