×

திமுக மகளிர் அணியினர் பிரசாரம்

வத்தலக்குண்டு, பிப்.27: வத்தலக்குண்டுவில் திமுக மகளிர் அணியினர், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பிரசாரம் மேற்கொண்டனர். வத்தலக்குண்டு காந்தி நகரில், வெல்லும் தமிழ் பெண்கள் சார்பில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு திமுக நகர செயலாளர் சின்னதுரை தலைமை வகித்தார்.

துணைச் செயலாளர் குமரவேல், பேரூராட்சி கவுன்சிலர் மணிவண்ணன், திமுக நிர்வாகி ஜெனித் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெல்லும் தமிழ் பெண்கள் படையினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, திமுக தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பிரசாரம் மேற்கொண்டனர்.

 

Tags : DMK Women's Team ,Vattalakundu ,Tamil Nadu government ,DMK City ,Chinnadurai ,Vattalakundu Gandhi Nagar.… ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்