×

தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் களப்பயணம்

வேதாரண்யம், பிப். 26: வேதாரண்யம் தாலுகா தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பில், போதை எதிர்ப்பு பிரசார களப்பயணம் மேற்கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிநிலவன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் பொய்யாமொழி, ஆசிரியர் குணசேகரன் மற்றும் மாணவ, மாணவிகள் ஒரு நாள் களப்பயணமாக பூவைத்தடி காரை நகரில் செயல்பட்டு வரும் மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தை நேரில் பார்வையிட்டு, போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய மையத்தின் செயல்பாடுகள், விழிப்புணர்வு தகவல்களையும் கேட்டறிந்தனர். பின்னர் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தை பார்வையிட்டு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வும் தமிழக அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் Drugs Free Tamilnadu செயலியை பயன்படுத்துவது எப்படி என்றும் தெரிந்து கொண்டனர். நிகழ்ச்சியை பசுமை படை ஆசிரியர் கண்ணையன் ஒருங்கிணைத்தார்.

 

Tags : Thoputhuraya Government Model School ,Vedaranyam ,Anti-Drug Forum ,Thoputhuraya Government Model Higher Secondary School ,Vedaranyam taluka ,Kavinilavan ,Poiyamozhi ,Gunasekaran ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்