×

நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், பிப்.26: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27ம் தேதி (நாளை) பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

Tags : Nagercoil ,Kumari District ,Collector ,Azhugumeena ,Kanyakumari District Collector ,District Revenue ,Officer ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்