×

வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடாக பரப்புரை

 

சென்னை: வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடாக பரப்புரை செய்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெரும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஸ்டாலினின் மகளிர் படையினர் முன்னெடுத்து வரும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை தமிழ்நாடு முழுக்க உற்சாகத்தோடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நேற்று (23-2-2026) 32,759 வாக்குச்சாவடிகளில் தொடங்கிய பரப்புரையானது இன்று மேலும் 13,174 வாக்குச்சாவடிகள் இணைந்து மொத்தம் 45,933 வாக்குச்சாவடிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஸ்டாலினின் மகளிர் படையினர் நேரடியாக சென்று பரப்புரை செய்து வருகின்றனர்.

இன்றைய பரப்புரைக் கூட்டத்தின் மையமாக திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் முதல் கையெழுத்திடப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டம் மகளிர் வாழ்க்கைக்கு எவ்வாறெல்லாம் பயன்பட்டு வருகிறது என ஸ்டாலினின் மகளிர் படையினர் எடுத்துக் கூறினர். பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் விடியல் பேருந்தை ஸ்டாலின் பஸ் என்றே பெண்கள் அனைவரும் அழைக்கின்றனர். சுமார் 70 லட்சம் மகளிர்கள் விடியல் பேருந்தில் நாள்தோறும் பயணித்து பயனடைந்து வருகின்றனர். இதுவரை 855 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு மகளிரும் ஸ்டாலின் பஸ் மூலம் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர்.

இந்த சேமிப்பு பணம் ஒவ்வொரு குடும்பத்தின் மருத்துவ செலவு, கல்வி செலவு, அவசர தேவைக்கு, நீண்ட கால சேமிப்புக்கு என பலவகையில் பயன்பட்டு பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் உறுதி செய்துள்ளது. திராவிட மாடல் அரசினால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பெண்கள் நல திட்டங்கள் மட்டுமல்ல அவை பெண்கள் முன்னேற்றத் திட்டங்கள். என்பதை அனைத்து பெண்களிடமும் விளக்கி கூறப்பட்டது. ஸ்டாலினின் மகளிர் படை ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் போது அங்குள்ள மகளிர் அன்போடு வரவேற்று டீ,காபி கொடுத்து உபசரிப்பதை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிந்தது.

ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திராவிடம் மாடல் அரசின் திட்டத்தால் பயனடைந்து வருவதாக பெரும்பாலான வீடுகளில் தெரிவித்தனர். வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடாக பரப்புரை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு எங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tags : STALIN ,WOMEN'S FORCE ,Chennai ,Tamil ,Nadu legislative elections ,
× RELATED மாப்பிள்ளை ராயப்பேட்டை… ஆனா சட்டை...