×

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

முஷ்ணம், பிப். 24: முஷ்ணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, முஷ்ணம் காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத், முதல் நிலை காவலர் குகன் மற்றும் போலீசார், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாலிஸ்பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நியாய விலை கடை பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் முஷ்ணம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டபோது, வாலிஸ்பேட்டை சின்னப்பன் மகன் டேவிட் (22), அந்தோணி ராஜ் மகன் அமுதன் (21). ஜோசப் மகன் அருண் (22) என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mushnam ,Sub ,Inspector ,Gopinath ,First Class Constable ,Kugan ,Valispet ,Ramapuram ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்