×

புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்திய ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள், கார் பறிமுதல்

விழுப்புரம், பிப். 21: புதுச்சேரியிலிருந்து, விழுப்புரத்திற்கு கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தி வரப்பட்ட ரூ.10லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரிலியிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு மதுபாட்டில், சாராயம் கடத்திவருவதை தடுக்கும்வகையில் மதுவிலக்கு போலீஸ் சோதனைச்சாவடிகள் மற்றும் நடமாடும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரின்பின்பகுதியில் அட்டைபெட்டிகளில் 180 எம்எல் அளவு கொண்ட 720 குவாட்டர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம் பங்கூரை சேர்ந்த ராமானுஜம் மகன் பாலசுந்தரம்(54) என்பதும், சின்னையன்பேட்டை சாமிக்கண்ணு மகன் பிரகாஷ்((40) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு விழுப்புரம் பகுதிக்கு கள்ளச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனர்.

Tags : Puducherry ,Villupuram ,
× RELATED மகனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி...