×

வாலிபருக்கு கொலை மிரட்டல்

வடலூர், பிப். 24: குறிஞ்சிப்பாடி அருகே அன்னதானம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் செல்வமணி(35). இவர் நேற்று முன்தினம் வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள வாழ்முனி கோயில் கிடா வெட்டுக்கு சென்று இருந்தார். அப்போது அவரது உறவினரான மாரியப்பன் என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. மாரியப்பன் நண்பரான துரைப்பாண்டி, மணிமாறன் மற்றும் சிலர் செல்வமணியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கட்டை கழியால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Vadalur ,Selvamani ,Annathanam Pettai village ,Kurinjipadi ,Vazhamuni ,Venkatampettai village ,Mariappan… ,
× RELATED சங்கராபுரம் பகுதியில் திடீர் நில அதிர்வு