- மேல்மலையனூர் கோயில்
- விழுப்புரம் மாவட்டம்
- விழுப்புரம்
- கலெக்டர்
- ஷேக் அப்துல் ரஹ்மான்
- திருத்தேர் உற்சவம்
- மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
விழுப்புரம், பிப். 20: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நாளை(21ம் தேதி) நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும் எனவும், மாணவ, மாணவிகளுக்கு 21ம் தேதி பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.
