- உளுந்தூர்பேட்டை
- கலாலகுரிச்சி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திருப்பூர்
- கோயம்புத்தூர்
- கேரளா
- மும்பை
- பெங்களூரு
உளுந்தூர்பேட்ைட, பிப். 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லாததால் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைக்காக சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதுடன், கேரளா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தைவான் நாட்டு நிறுவனத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தோல் இல்லா காலணி தொழிற்சாலை ரூ.2300 கோடி மதிப்பீட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே எ.சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தோல் இல்லா காலணி ெதாழிற்சாலை பணிகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் இந்த பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்கும் வகையில் பணி ஆணைகளை வழங்கினார். இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அடுத்த கட்ட தொழிற்சாலைகள் துவங்க உள்ளதால் இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை பகுதியில் பிரமாண்டமான இந்த தோல் இல்லா காலணி தொழிற்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட படித்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
