×

அரசு பேருந்து உடைப்பு வழக்கில் விசிக நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை

மயிலம், பிப். 19: திண்டிவனத்தில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற பாஜக சாதனை விளக்க கூட்டத்திற்கு அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் உணவகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசிக நிர்வாகி திண்டிவனம், எம்ஜிஆர் தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் அரசு பேருந்தின் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். இச்சம்பம் குறித்து கடந்த 14.03.2023 அன்று கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்த ஜெயராமன் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசிக பிரமுகர் தென்னரசு மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். திண்டிவனம் நீதிமன்றத்தில் கடந்த 10.10.2025 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. மேலும் திண்டிவனம் நீதிமன்றம், மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்றம் எண் 2ல் நடைபெற்று வந்த நிலையில், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக விசிக நிர்வாகி தென்னரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.5,000 அபராதமும், அதை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறையும் அனுபவிக்க மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிபதி ஹேமாந்திர குமார் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Tags : VKC ,Mayilam ,national general secretary ,H. Raja ,BJP ,Tindivanam ,Mayilam Road ,
× RELATED சங்கராபுரம் பகுதியில் திடீர் நில அதிர்வு