- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- பில் கேட்ஸ்
- ஆந்திரா
- பிரதேசம்
- செயலகம்
- அமராவதி
- மைக்ரோசாப்ட்
- ஆந்திரப் பிரதேச செயலகம்
- ஆந்திர
- தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
- Naralokesh
- துணை
அமராவதி: ஆந்திரப் பிரதேச செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு-வை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று சந்திந்தார். அவரை வரவேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ், துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சில மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
ஆந்திரப் பிரதேச அமைச்சர்களுடன், சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாக முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பில் கேட்ஸ் விவாதித்தாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கேட்ஸ் அறக்கட்டளை சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பத்தில் சுகாதாரம் தொடர்பான திட்டங்களில் பணியாற்றி வருகிறது, மேலும் தென் மாநிலம் முழுவதும் பரந்த மக்கள்தொகைக்கு பயனளிக்கும் வகையில் இந்த தலையீடுகளை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
