×

பாலிவுட் திரையுலகில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் ஆபாச விமர்சனம்: மனம் திறந்த பிரபல நடிகை ரவீணா

 

மும்பை: கடந்த 1991ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து ‘பத்தர் கே பூல்’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரவீணா டாண்டன், பிரபல தயாரிப்பாளர் ரவி டாண்டனின் மகளாவார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘நான் திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் சினிமா பத்திரிகைகள் எனக்கு ஆதரவாக இல்லை. மும்பையில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்தபோது ஆண், பெண் என இருபாலினத்தவருடன் சரிசமமாகப் பழகி வளர்ந்தேன். திரையுலகிலும் அதே இயல்பைக் கடைபிடித்தேன்.

ஆனால், சக நடிகைகளிடம் காட்டிய உண்மையான அன்பைக்கூட, சினிமா இதழ்கள் போலியானது எனத் தவறாகச் சித்தரித்து விமர்சித்து வந்தன. குறிப்பாக சஞ்சய் கபூர் மற்றும் அர்பாஸ் கான் போன்ற தனது சக ஆண் நடிகர்களுடன் நட்பாகப் பழகியதை அந்த இதழ்கள் ஆபாசமான முறையில் விமர்சித்தன. ஜூஹி சாவ்லாவுக்கு பிறந்தநாள் ‘கேக்’ அனுப்பியதைக் கூட தவறாக எழுதினார்கள். ஒரு ஆணுடன் நட்பாகப் பழகினால் என்னைப் பற்றி ஆபாசமான கருத்துகளைப் பரப்பினார்கள்.

இத்தகைய தேவையற்ற விமர்சனங்களால் மனமுடைந்து பொதுவெளியில் இருந்து நான் சில காலம் ஒதுங்கியிருந்தேன். இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதும் அவர்கள் (பத்திரிகையாளர்கள்) எனக்குச் சிறந்த நண்பர்களாகத் தொடர்வதாகவும், அன்று என்னை விமர்சித்த அதே இதழ் ஆசிரியர்கள் இப்போது எனது குணத்தைப் பாராட்டுகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

Tags : Bollywood ,Ravina ,MUMBAI ,RAVEENA TANDON ,SALMAN KHAN ,RAVI TANDON ,
× RELATED மகாராஷ்டிரா அரசியலில் புதிய...