×

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவுநாள் அனுசரிப்பு

கோவை,பிப்.13: கோவையில் சுதந்திர போராட்ட தியாகியும், தொழிற்சங்கவாதியுமான தியாகி என்.ஜி. ராமசாமியின் 83வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஏஐடியுசி சார்பில் எம்.ஆறுமுகம், செல்வராஜ், எல்பிஎப் சார்பில் சிடிசி துரை, ஆனந்த், தமிழ்செல்வன், ஐஎன்டியுசி சார்பில் பாசமலர் சண்முகம், துளசி தாஸ், எச்எம்எம் சார்பில் சண்முகம்,தேவராஜன்,

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம்,சிஐடியு சார்பில் கிருஷ்ண மூர்த்தி, பத்மநாபன், டிடிஎம்எஸ் சார்பில் காளியப்பன், ஏஐசிசிடியு சார்பில் பாலசுப்பிரமணியன் மற்றும் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சு.பழனிசாமி, வி.ஆர்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Martyr N.G. Ramasamy ,Coimbatore ,N.G. Ramasamy ,M. Arumugam ,Selvaraj ,AITUC ,CDC Durai ,Anand ,Tamilselvan ,INTUC ,LPF… ,
× RELATED நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்